ஆதரவாளர்கள்

வியாழன், 26 மே, 2016

தொழில் தொடங்க கடன் உதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

புகைப்படங்கள்
சுய தொழில் தொடங்கும் படித்த இளைஞர்கள், கடன் உதவி மற்றும் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஐ.டி.ஐ, டிப்ளமோ, இளங்கலை, முதுகலை படித்த இளம் ஆண், பெண்களுக்கு ஒரு மாத தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சிக்குப் பின் தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து, வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன் பெற வழி வகை செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குபவர்களுக்கு ரூ.25 லட்சம் வரை முதலீட்டு மானியமும், 3 சதவீதம் பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 21 முதல் 35 வயது வரை.  மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர் மற்றும் பிற வகுப்பினருக்கான வயது வரம்பு 45. இப்பயிற்சியில் பங்கேற்கும் தொழில்முனைவோர்கள்  ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை உற்பத்தி அல்லது சேவை தொழிலில் முதலீடு செய்யலாம். கிண்டி, தொழிற்பேட்டையில் உள்ள தொழில்வணிகத் துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.   மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வுக்குழு பயிற்சிக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

கருத்துகள் இல்லை: