ஆதரவாளர்கள்

திங்கள், 24 நவம்பர், 2014

சமூக சேவை அமைப்புகளால் பெருகும் ஊழல்

நமது நாட்டில் NGO (அரசு சாரா சேவை அமைப்புகள் ) கணக்கில்லாமல் இருக்கின்றன. குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை விட இந்த அமைப்புகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்த அமைப்புகள் எல்லாம் தனது நோக்கமாக பதிவு செய்திருக்கும் செயல்களை உண்மையாக செய்திருந்தால் அரசாங்கம் மக்களுக்காக எதுவும் செய்ய தேவையில்லை.

இந்த அமைப்புகள் சில வெளிநாட்டு உதவியும் பெறுகின்றன
ஒருலட்சம் கோடி ரூபாயுக்கும் மேலாக கடந்த சில ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து நன்கொடை இந்த அமைப்புகளுக்கு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உள்நாட்டிலும் தொழில் நிறுவனங்களும்  கோடிக்கணக்கான ரூபாய்களும் இந்த அமைப்புகள் பெறுகின்றன.

உதாரணமாக மாற்றுத்திரனாளிகளுக்கென்று உதவிடும் சேவை அமைப்புகள் பற்றி பார்ப்போம்

இந்தியாவில் உள்ள மொத்த மாற்றுத் திறனாளிகள் (சுமார் 7 கோடி இவற்றில் அதரவில்லாதவர்கள் அல்லது பிச்சை எடுப்போர்கள் சுமார் 2 லட்சம்  ) எண்ணிக்கையை விட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் அமைப்புகள்(இந்திய முழுவதும் சுமார் 2.68 லட்சம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ) அதிகமாக உள்ளன. இவ்வமைப்புகளுக்கு தாராள நிதி உதவி அனைவராலும் வழங்கப்படுகின்றது
ஒரு அமைப்பு ஒருவரை தத்து எடுத்துக் கொண்டால் அங்கே இவர்கள் உதவி ஏற்றுக்கொள்ள ஆட்கள் இல்லாமல் பற்றாக்குறை ஏற்ப்படும் ஆனால் ஒவ்வொரு அமைப்பினரும் நூறுக்கும் குறையாமல் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி வருவதாக கணக்கு சொல்கின்றன. அப்படி பார்த்தால் சுமார் 3 கோடி ஆதரவற்ற மாற்றுத் திரனளிகளுக்கு உதவி செய்திருக்க வேண்டும் உண்மையில் செய்யாமலே போய்க் கணக்கு காட்டி ஊழல் செய்கின்றார்கள்.

இது உதாரணம் தான் இதுபோன்று எண்ணற்ற அமைப்புகள் உருவாக்கி வரிவிலக்கு பெற்று அரசுக்கு செல்லவேண்டிய பணத்தை தனதாக்கிக் கொள்ளும் கயவர்களின் கூடாரமாக விளங்கிவரும்போது ஊழல் பெருகத்தானே செய்யும் ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் இதுபோன்ற நன்கொடை மட்டுமே பெற்று செயல்படும் அமைப்புகளை அடையாளம் கண்டு சொல்லுங்கள் அவர்களை சமூக சேவை அமைப்புகள் என்று சொல்வதை தடுத்து நிறுத்துங்கள் இவர்கள் சமூகத்திற்கு கேடானவர்கள்.
சில சமூக சேவை அமைப்புகளுக்கு மக்கள் விரோத சக்திகள் நிதி அளித்து மக்கள் நலனுக்கெதிராக நாட்டு நலனுக்கேதிராகவும் போராட்டம் செய்ய தூண்டும் அமைப்புகள் மக்களுக்கு நிதி அளித்து  ஆட்களை திரட்டி போராட்டம் நடத்துகின்றன. போராட்டம் வலுவடைந்தபிறகு மக்களிடம் பணம் வசூலித்து செலவு செய்த பணத்தை மீட்டு விடுகின்றனர். இதனால் உள்நாட்டில் குழப்பங்களும் சட்ட ஒழுங்கு கெடுவதுடன் நாட்டின் நாட்டு மக்களின் வளர்ச்சி பாதிக்கின்றது ஆகவே இத்தகைய அமைப்புகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
உதாரணமாக
சாயப்பட்டறைகளுக்கு எதிரான போராட்டம்
சாயப்பட்டறைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திட அமைப்புகள் சொன்ன காரணம் நிலத்தடி நீர் மாசு படுகின்றது.
தீர்வாக என்ன கேட்டார்கள் ; சாயப்பட்டறைகளை மூடக் கேட்டார்கள்
விளைவு சாயப்பட்டறைகள் குஜராத் முதலாளிகள் வசம் குஜராத்தில் பெரிதாக வளர்ந்தது . அங்கே மட்டும் நிலத்தடி நீர் மாசு அடையாதா? அடையும் சாயப்பட்டறை அதிபர்களின் கோரிக்கைக்காக அதற்காக அரசே சுத்திகரிப்பு நிலையம் அமைத்தது .
இங்கே சாயப்பட்டறை மூடவேண்டும் என்று போராடியவர்கள் சுத்திகரிப்பு நிலையம் அரசே அமைக்கவேண்டும் என்ற இங்குள்ள முதலாளிகளின் கோரிக்கை ஏற்காமல் மூட வைத்தார்களே அதன் விளைவு
அனைத்து துநிவகைகளும் 30 சதம் விலையேற்றம் இனி குஜராத் முதலாளிகள் விற்கும் விலைக்கு வாங்க வேண்டிய நிலை நமக்கு . ஆகவே போராட்டம் நடத்தும் அமைப்புகள் சுய லாபத்துக்காக மக்கள் விரோத நடவடிக்கைகளை தெரிந்தோ தெரியாமலோ செய்கின்றன என்பதால் போராடும் அமைப்புகள் போராட்டத்தில் பங்குபெறும் முன் சிந்திக்க வேண்டும்

இதற்கு தீர்வு என்ன? தேவை விழிப்புணர்வு ஆட்டுமந்தைகளாக நாலுபேர் ஒண்ணா கூவினா நாமும் உடன் சேர்ந்து கூவுவதை நிறுத்தவேண்டும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
அரசு அலுவலர்கள் தான் செய்யும் பணியில் மக்களுக்கு சேவையாற்ற முடியும் ஆனால் அவர்கள் எதற்காஒரு அமைப்பை நிறுவி அதன்மூலம் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவார்களா இல்லை அவர்களின் லஞ்சப் பணத்தை தவறான பணத்தை பாதுகாக்க ஒரு அமைப்பை துவக்கி அதன் மூலம் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.

இதுபோன்று சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இவர்களுக்கு எதற்கு தொண்டு நிறுவனம் நேரடியாகவே மக்களுக்கு தொண்டு செய்யலாமே.
அடுத்து திறமையான பேச்சாளர்கள் தனது புலமையைக் காசாக்கும் வித்தகர்கள் தனக்கு இவ்வளவு தனது அமைப்புக்கு இவ்வளவு என்று கூலி நிர்ணயம் செய்துவிட்டு வந்து உபதேசம் செய்கின்றார்களே அத்தகைய உபதேசம் செய்வதால் யாருக்கு பயன் அதைக் கேட்பத்கால் யாருக்கு லாபம். இவர்கள் மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகின்றேன் நல்வழிப் படுத்துகின்றேன் என்று வியாபாரம் செய்தால் பலன் பெறுபவர்கள் யார்

ஆகவே நன்மக்களே !
நீங்கள் சேவை செய்யுங்கள் அது உங்களது வரிக்கு பிந்தைய வருவாயாக இருக்கட்டும்
சேவை செய்யுங்கள் அரசாங்கத்திற்கு செல்லும் பணத்தை குறுக்கு வழியில் களவாடும் நிறுவனங்களிடம் நன்கொடை வாங்காதீர்கள்
சேவை செய்யுங்கள் உங்களின் அறிவைக் கொடுங்கள் உங்களது கற்றலைப் பகிருங்கள் குடிமக்கள் தங்கள் தேவைகளை பெற வழிகாட்டுங்கள்
தவறு செய்யும் தவறான வழியில் பொருள் ஈட்டும் ஒவ்வொரு அரசு அலுவலர்களும் தொழில் அதிபர்களும் சமூக விரோதிகளுக்கும் அடைக்கலமாக இருக்கும் சமூக சேவை அமைப்புகளை நன்கொடை பெற தடை கோருவோம். நன்கொடை பெறாமல் சேவை செய்யட்டும்.

கருத்துகள் இல்லை: