ஆதரவாளர்கள்

திங்கள், 25 நவம்பர், 2013

RTI Act -2005 கட்டணம் இல்லை விதிமுறைகள் உண்டு 01-12-13

பயிற்சியில் என்ன கற்றுக்கொள்ளலாம் ?
venue ; KUMMBUT COMLEX, 29 RATTAN BAZAAR, CHENNAI 3
DATE TIME: 01-12-13 , 10 AM TO 5 PM
1 தகவல் சட்டம்
2 ம்தகவல் சட்டம் மனுக்களை தயாரிப்பது எப்படி
3 நாம் அளிக்கும் புகார் மற்றும் கோரிக்கை மனுக்களின் மீது அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க தகவல் சட்டத்தை பயன்படுத்துவது எப்படி?
4 அலுவலக நடைமுறைகள் , விதிமுறைகள் அறிதல்.
5 அலுவலர்கள் கடமைகள் அரசு துறைகளில் மக்களின் உரிமைகள்
6 அலட்சியம் காட்டும் அல்லது கடமை தவறும் அலுவலர்கள் மீது புகார் செய்து நடவடிக்கை எடுப்பது எப்படி
7 கல்விக்கடன் உள்ளிட்ட வங்கிக் கடன்கள் தகவல் சட்டத்தின்மூலம் பெறுவது எப்படி
.8 அரசு துறைகளின் பயன்கள் மக்கள் சாசனம்
9 தகவல் சட்டம் மூலம் ஊழலை ஒழிப்பது எப்படி?
10 நல்வாழ்வு வாழ வாழ்வியல் கல்வி

பயிற்சியில் கலந்துகொள்ள விதிமுறைகள்

1 பயிற்சியில் கலந்துகொள்பவர்கள் தொடர்ந்து மாதம் ஒருநாள் வீதம் 5 மாதங்கள் தொடர்ந்து வரவேண்டும் இடையில் நின்று அடுத்த மாதம் கலந்துகொள்ள இயலாது மீண்டும் அடுத்த பிரிவில் முதல் மாதத்தில் இருந்துதான் வரவேண்டும்
2 மதிய உணவு உள்ளிட்ட தங்களின் தேவைகளை தாங்களே பார்த்து எடுத்து வரவேண்டும்
3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, 60 பக்கம் நோட்டு பேனா கட்டாயம் எடுத்துவர வேண்டும்
4 வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் வந்து போகும் செலவுகளை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்
5 பயிற்சி முடித்ததும் குறைந்தபட்சம் மாதம் இரண்டு நாள் அல்லது வாரம் ஒரு நாட்கள் உதவி மையம் கட்டாயம் நடத்திடல் வேண்டும்
6 பயிற்சி முடித்த பிறகு தங்களது சொந்த செலவில் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு பயிற்சி அளிக்க கூட்டங்களில் கலந்துகொள்ள குறைந்தபட்சம் மாதம் இரண்டு முறை சென்றுவரும் அளவு பொருளாதார வசதி இருக்க வேண்டும்.
7 நிரந்தர வருவாய் வசதி உள்ளவர்களாக (மாதாந்திரப் பனி அல்லது சுய தொழில் ) இருப்பது கட்டாயம்
8 ஆர்வமுள்ள எந்த அமைப்பினரும் மதத்தினரும் பயிற்சியில் கலந்துகொள்ளலாம்

9 பிற விதிகள் பயிற்சியில்

உதவி மையம் நீங்கள் சார்ந்துள்ள அமைப்பின் பெயரில் அல்லது எந்த பெயரில் வேண்டுமானாலும் நடத்திடலாம்.
இந்தியன் குரல் அமைப்பின் பெயரில் நடத்திட நீங்கள் விரும்பினால் எழுத்து பூர்வ அனுமதி இந்தியன் குரல் அமைப்பிடம் பெறுவது அவசியம்.

அலுவலர் பணிகடமை அலுவலக நடைமுறை , அலுவலகத்தில் யாரிடம் புகார் அல்லது கோரிக்கை மனுக்கள் கொடுக்கவேண்டும் என்றும் தான் கொடுக்கும் கோரிக்கை மற்றும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் அலுவலர்மீது புகார் செய்வது எப்படி என்று அறிந்தவர்கள் லஞ்சம் கொடுப்பதில்லை குறித்த காலத்தில் அவர்களது தேவை நிறைவேற்றிட தன்னம்பிக்கையுடன் தைரியமாக கேட்டு வெற்றி பெறுகின்றார்கள்

அரைகுறையாக சட்டம் தெரிந்தவர்களும் தன்னம்பிக்கை அற்றவர்களும் தவறாகவோ அல்லது முடியாது நடவாது என்று சொல்லிக்கொண்டு தெரிந்தோ தெரியாமலோ தானும் கெட்டு சமுதாயத்தையும் கெடுக்கும் வாய்ச்சொல் வீரராக இருக்கின்றார்கள்.



தகவல் சட்டத்தால் சாதனை ;

1-11-13 வரை
கல்விக் கடன் விண்ணப்பம் கூட வழங்க மறுக்கப்பட்ட 9000 க்கும் மேற்ப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கடன் பெற வழி காட்டியுள்ளோம்.
பல்லாயிரம் பொதுமக்களின் கோரிக்கைகளை(பட்டா பிரிப்பு பெயர் மாற்றம் முதல் மின் இணைப்பு முதியோர் ஓய்வூதியம் முதல் கைம்பெண்கள் உதவி வரை அரசின் திட்டங்களை)  லஞ்சம் கொடுக்காமல் கிடைக்க உதவி செய்துள்ளோம்.
கடமையை செய்ய லஞ்சம் கேட்ட நூற்றுக்கணக்கான அலுவலர்கள் கைது செய்ய நடவடிக்கை உதவி

பலநூறு ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களின் பணப்பயன் கிடைக்க உதவியுள்ளோம்

உயர் அலுவலர்களினால் பழிவாங்கல் நடவடிக்கைக்கு உட்பட்ட நேர்மையான நூற்றுக்கும் மேற்ப்பட்ட அலுவலர்கள் தண்டனை ரத்து. காரணமான அந்த உயர் அலுவலர் மீது துறை நடவடிக்கை மேற்கொள்ள உதவி

இதுபோன்று இன்னும் பல உங்கள் தேவைக்கும் உதவிக்கும் தொடர்புகொள்ளுங்கள். நியாயமான கோரிக்கைகள் சட்டத்திற்குட்பட்டு தரும நியாயப்படி மட்டுமே இந்தியன் குரல் வழிகாட்டுகின்றது.

 நல்லவிசயம் நாலு பேருக்கும் தெரியட்டுமே இணைப்பை சொடுக்கி ஒரே ஒரு லைக் கொடுங்கள் நன்மக்களே!
www.facebook.com/voiceofindianorg

www.voiceofindian.org
www.vitrustu.blogspot.com

VOICE OF INDIAN
 தகவல் சட்டத்தைப் பரப்புரை செய்வதும் பயிற்சி அளிப்பதும் சட்டத்தைப் பாதுகாப்பதும் - இந்தியன் குரல் நோக்கம்
நன்கொடை பெறுவதில்லை,  அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை பயிற்சி மற்றும் எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம்  வாங்குவதில்லை - இது இந்தியன் குரல் கொள்கை

கருத்துகள் இல்லை: