ஆதரவாளர்கள்

வியாழன், 3 அக்டோபர், 2013

தமிழகத்தில் ஈழப் போராட்டம் ஒரு கோணம் - ஆண்டவா இதில் உண்மை இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டேன்

நேற்று ஒரு அன்பரிடம் உரையாடிக்கொண்டு இருந்த பொழுது, ஒரு தகவல் சொன்னார் உண்மையானு தெரியாது இருந்தாலும் அவர் சொல்வதில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

அதாவது ஒரு சில அமைப்புகள் ஈழம் ஈழம் என்று கூவி கூவி போராடுவதும் தூக்கில் இருந்து காக்கப் போராடுவதும் வரவேற்கப் பட வேண்டிய விஷயம் ஆனால் அவர்கள் உண்மையாக போராடுகின்றார்களா என்றால் இல்லை அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவே போராடுகின்றார்கள் என்றார்.

எப்படி என்றேன்.
கோவில் உண்டியலில் காசுபோடுபவன் துன்பத்தை எதிர்கொண்டவன் தானே அது எந்த மத நடைமுரையானாலும் அந்த மதத்தில் கொடை அளிப்பவன் ஒரு வித பாதிப்புக்கு உள்ளானவனாகத் தான் இருப்பான். அல்லது ஆசை பயம் கொண்டவனாக இருப்பான்
ஈழத்தில் இருந்து வெளி நாட்டில் வாழும் பாதிக்கப்பட்ட அந்த அப்பாவி மக்கள் யாரேனும் ஏதேனும் செய்துவிட மாட்டார்களா எம்மக்களைக் காக்க ஒரு துரும்பேனும் நகராதா என்று நாடு இழந்து வெளி நாட்டில் பஞ்சம் பிழைக்கச் சென்ற மக்கள் இப்படி ஈழம் காப்போம் என்று யார் சொன்னாலும் தன்னுடைய வருமானத்தில் ஒரு பங்கை காணிக்கையாக செலுத்துவதை கடமையாக வைத்துள்ளார்கள்.
இப்படி துரும்பைத் தேடும் ஈழ மக்களை குறிவைத்தே அவர்களின் பணத்தைப் பெற்று பிழைப்பு நடத்திடவே இவர்கள் கவர்ச்சியாக கூவி கூவி வியாபாரம் செய்கின்றார்கள் என்றார்.

உண்மையில் உணர்வுப் பூர்வமாக போராடுபவர்கள் சிலர் இருக்கலாம் ஆனால் பலர் பிணத்தின் மீது தவழ்ந்து வரும் பணத்திற்கும் புகழுக்கும் ஆசைபட்டே கூவுகின்றார்கள். இவர்கள் ஆபத்தானவர்கள் அந்த சிங்கிளக் கொடியவனை விட இந்த உலகத்தில் உள்ள எல்லாக் கொடியவர்களையும் விட கொடியவர்கள். ஆனாலும் என்ன செய்ய இவர்களை  தெரிந்தாலும் சரி ஏதாவது நல்லது நடக்குமா என்ற நம்பிக்கையிலேயே அவர்களும் பணத்தை கொட்டுகின்றார்கள். இது உண்மையா இல்லையா என்பதை ஈழம் ஈழம் என்று கூவும் நண்பர்களின் கடந்த கால பொருளாதார நிலையையும் இன்றைய நிலையையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் கூர்ந்து கவனித்தால் விளங்கும் என்றார். இவர்கள் எந்த வேலைக்கும் போவதில்லை எந்த தொழிலும் செய்வதில்லை போராட்டம் மட்டுமே பிரச்சாரம் மட்டுமே செய்கின்றார்கள் இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகின்றது. என்பதை இவர்கள் வெளிப்படையாக காட்டச் சொன்னால் இவர்களது சாயம் வெளுக்கும் என்றார்.

நான் வாயடைத்துப் போனேன் ஆண்டவா இதில் உண்மை இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டேன் வேறு என்ன சொல்ல. அந்த நண்பர் பொய் சொல்பவரும் அல்ல இப்படி சொல்வதனால் அவருக்கு தான் நஷ்ட்டம். ஏனென்றால் அவரும் தொடர் நன்கொடை வழங்கி வரும் ஒரு கொடையாளிதான் .

கருத்துகள் இல்லை: