ஆதரவாளர்கள்

செவ்வாய், 21 மே, 2013

தகவல் பெரும் உரிமைச் சட்டம் 2005 பகுதி 1

நண்பர்களே 
 தகவல் பெரும் உரிமைச் சட்டம் தொடர் போராட்டத்தின் விளைவாக 27 தோழர்களின் உயிர்கள் பலியானதன் பின்னர்தான் மக்களுக்கு கிடைத்தது. உயிர் நீத்த போராளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி  இந்தப் பதிவை சமர்ப்பிக்கின்றேன்.



நான் இந்தியன் இந்திய மண்ணில் தான் பிறந்தேன் வளர்ந்தேன். இந்த தேசம் எனக்கு என் குடும்பத்திற்கு என் தாய் தந்தையருக்கு பல உதவிகள் செய்துள்ளது. இந்த மக்களின் வரிப்பணத்தில் தான் கல்வி கற்றேன். மக்கள் தந்த ஆதரவால் தான் நான் இன்று சென்னை திருவொற்றியூரில் குருபிரசாத் எனும் பெயரில் துணிக்கடை நடத்திவருகின்றேன். இன்று சுகமாய் இருக்கின்றேன்  நான் உண்ணும் உணவு மக்கள் பணம் நான் உடுத்தும் உடை மக்களுடைய பணம்  அப்படி பட்ட மனித சமூகத்திற்கு என் கடனை நான் உயிருடன் இருக்கும் பொழுதே திருப்பிச் செலுத்துதல் வேண்டும் இந்த சமுதாயத்தில் இருந்து நான் என்ன எடுத்தேனோ அதை திரும்ப அளிக்காமல் இருந்தால் நான் திருடனாவேன். இரவல் பொருளைத் திரும்ப அளிப்பதும் வாங்கிய கடனை திரும்பக் கொடுத்து விடுவதும் தர்மம் ஆகும் அத்தகைய தர்மத்தின் அடிப்படையில்  என்னுடைய சமுதாயத்திற்கு என்னுடைய சமுத்தாயக் கடமையாற்ற வேண்டும்.

 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் ஒரு மாணவனுக்காக மக்கள் வரிப்பணத்தில் அரசு செலவிடும் தொகை 22000 ரூபாய் சுயநிதிப் பள்ளியில் பயிலும் ஒரு மாணவனுக்கு 10000 ரூபாயும்  கல்லூரி மாணவனுக்கு பொறியியல் மாணவனுக்கு மருத்துவ மாணவனுக்கு சுயநிதிக் கல்லூரி என்றாலும் கூட அரசு பணம் செலவிடுகின்றது.

இந்தத் தொடர் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பயன்பெற உதவிட வேண்டும் என்ற எண்ணத்தில் விரிவான விளக்கங்களுடன் மாதிரி விண்ணப்பங்களுடன் எழுதுகின்றேன். இதைத் தொடர்ந்து படித்தவர்கள் யாருடைய உதவியுமின்றி தகவல் சட்டத்தைப் பயன்படுத்த மனுக்களை எழுத முடியும்.

ஒவ்வொரு அரசுத்துறை செயல்பாடு அந்தத் துறை சார்ந்த அலுவலக நடைமுறைகள் அந்த அலுவலகத்தில் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களைப் பெறும் அலுவலர் யார் அந்தக் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அலுவலர் யார் அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறிய அலுவலர் மீது  புகார் பெற்று நடவடிக்கை எடுக்கும் அலுவலர் பதவி பெயர் விலாசம் மற்றும் தவறு செய்த அலுவலருக்கு துறை ரீதியான தண்டனை என்ன? என்ற அனைத்தும் அறிந்துகொள்ள எளிமையான ஆனால் வலிமையான சட்டம் தகவல் உரிமைச் சட்டம். இதன் விரிவான பயன்பாடு குறித்த முழுமையான விளக்கம் பெறலாம்  வலை நண்பர்கள் பலரும் நண்பர்களுக்கு பகிர்வதன் மூலம் தங்களது பங்களிப்பை வழங்கிவிடுவார்கள்

ப்ளாக் எழுதுபவர்கள் சமூக ஆர்வலராக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை ஆனாலும் பலர் நல்ல கருத்துகளை பகிர்கின்றார்கள். நல்ல பதிவுகளுக்கு மரியாதை தந்து படிப்பதுடன் பதிலுரை இடுகின்றார்கள் ஆரோக்கியமான விவாதம் செய்து தெளிவு பெற  ஆரோக்கியமான சந்ததியினர் நல்ல இளைஞர்கள் மனித நேயம் மிக்க வலை மக்கள் இருக்கின்றார்கள் அவர்களின் வாயிலாக இந்த சமுதாய மக்களுக்கு உதவி  செய்யவேண்டும் என்ற எண்ணம் என்னை வலைப் பதிவராகத் தூண்டியது என்பதில் ஐயமில்லை

 குழிதோண்டி தன்னைக்  காயப்படுத்தும் மனிதனையும் தன்னை மிதித்துச் செல்லும் மக்களையும் தன் மீது தாங்கிக் கொண்டு அம்மக்களுக்கும் நன்மையை மட்டுமே செய்யும் பூமியைப் போன்ற பொறுமையும் நல்லது செய்யவேண்டும் எனும்  குணமும் மக்களுக்கு வேண்டும். அப்படி வாழ்க்கை வாழும் மக்களுக்கும் அம்மக்களின் சந்ததிகளுக்கும் துன்பமில்லா வாழ்வு கிட்டும்.

மக்களுக்கு நன்மை செய்வதால் துன்பம் நேர்கின்றது எனும்போது உயிரைக் கொடுத்தாகினும் அந்த நன்மையை செய்திடல் வேண்டும்.
எனும் வள்ளுவன் கூற்றுப்படியும்

27 தோழர்கள் தங்களின் உயிரைத் தந்து போராடி சட்டங்களுக்கு எல்லாம் சட்டமான இந்திய துணைக் கண்டத்திற்கு கிடைத்த இரண்டாவது சுதந்திரமான தகவல் சட்டம் என்று சொல்லப்படுகின்ற இச் சட்டத்தைப் பாமரனுக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கில் பரப்புரை செய்வதில் இந்தியன் குரல் பெருமை கொள்கின்றது.

 நான் இருக்கும் காலத்தில் என் கடனை தகவல் பெரும் சட்டம் பரப்புரை செய்வது மற்றும் மனுக்களை எழுத உதவி செய்வது மற்றும் மக்கள் நலன் சார்ந்த மனுக்கள் மூலம் மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பது  என்பதன் வாயிலாகவும் திரும்பச் செலுத்திக் கொண்டு இருக்கின்றேன்.
எனக்கு மெயில் மூலமாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடர்ந்து இச் சட்டம் பற்றிய தொடர் பற்றிய விவரங்களைக் கேட்டு  ஊகாமளித்த வலைப் பூ நண்பர்களுக்கும் சக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த  நன்றி செலுத்திடவும் தகவல் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு கட்டுரையை எழுதத் தொடங்குகின்றேன். பெருமளவு ஆதரவு தருவதுடன் அனைத்து மக்களும் பயன் பெற ஒரு கிளிக் பகிர்வின் மூலம் உதவிட வேண்டுகின்றேன்.

அறிமுகம்

வெள்ளையர்களின் அடிமையிலிருந்து இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. 1950 ஆம் ஆண்டு முதல் இந்திய மக்களுக்கு பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் என்று முழுமையான சுதந்திரம் மக்களுக்கு கொடுக்கப்பட்டது ஆனாலும் மக்களுக்கு சுதந்திரம் என்று சொன்னார்களே தவிர அதை உரிமையாகத் தரவில்லை அந்த உரிமை சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டு கடந்து 2005 ஆம் ஆண்டுதான் மக்களுக்கு வழங்கப்பட்டது. மக்கள் தங்களது  உரிமையை பெற உண்மையான சுதந்திரமாக தகவல் உரிமைச் சட்டம் 2005 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு அமுலுக்கு வந்தது. அன்று முதல் இச் சட்டம் நடைமுறையில் உள்ளது.

தகவல் உரிமை இருக்கும் போது லஞ்சம் ஏன் ?
சுயமரியாதையை இழக்காமல், அலைந்து திரியாமல், லஞ்சம் தராமல், இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் மத்திய மாநில அரசின் திட்டப் பயன், பட்டா, பட்டா பெயர் மாற்றம் சிட்டா,பிறப்பு வருவாய் சாதி சான்று, முதல் தலைமுறை கல்வி பெரும் மாணவனுக்கான சான்று உள்ளிட்ட அனைத்து சான்றுகள்

கல்விகடன் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி கல்வி  போன்ற அனைத்து நன்மைகளையும் பெற இந்தச் சட்டம் பயன்படுகிறது. இச் சட்டத்தின் படி தகவல் கேட்பவருக்கு 30 தினங்களுக்குள் தகவல் தரவேண்டும் அவ்வாறு 30 தினங்களில் தகவல் தராத அலுவலருக்கு 25000 ரூபாய் வரை அபராதமும் துறை ரீதியில் நடவடிக்கைக்கு உத்தரவிட தகவல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கியிருப்பதன் மூலம் தகவல் உரிமைச் சட்டம் எத்தனை வலிமையானது என்று புரியும்.

வலைப் பதிவு நண்பர்களே இணைய நண்பர்களே தொடர்ந்து படியுங்கள் உங்களது கருத்துக்கள் பின்னூட்டமாக இடுங்கள் உங்களது கருத்துக்கள் கேள்விகள் எங்களுக்கு ஊக்கமளிக்கும். மேலும் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு அலைபேசியிலோ அல்லது இந்தியன் குரல் இலவச உதவி மையம் மூலமாகவோ தொடர்பு கொள்ளுங்கள்.
 நட்புடன்  இந்தியன் குரல் இ. பாலசுப்ரமணியன் 9444305581

 இப்படி ஒரு சட்டம் கொண்டுவந்ததன் நோக்கம் யாருக்கு எப்படி எழுதுவது  என்பது பற்றிய பயிற்சி அடுத்த பதிவில்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தங்கள் எண்ணம் போல் அனைவருக்கும் வர வேண்டும்...

இன்னும் நிறைய அறிந்து கொள்கிறோம்... தொடர வாழ்த்துக்கள்...

VOICE OF INDIAN சொன்னது…

உங்களது கருத்திற்கு நன்றி திரு தனபாலன் அவர்களே
அரசு அலுவலர்கள் தங்களை வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல சோறு போடும் மக்களை தன எஜமானரையே அதிகாரம் செய்யும் அரசு ஊழியர்கள் பேசுவது நான் மக்களின் ஊழியன். நம்ம அரசியல் வாதி போல அரசு அலுவலர்கள். பதவிக்கு பிறகு நம்முடன் குப்பன் சுப்பனுடன் வரிசையில் தான் வர வேண்டியிருக்கும் என்று சொல்வது யார். அவர்கள் கடவுளின் அவதாரம் இல்லை இந்த நாட்டு மக்களில் நீயும் ஒருவன் மக்களுக்கு பனி செய்யவே இந்தப் பதவியில் இருக்கின்றாய் என்று யார் புரியவைப்பது? இந்தியன் குரல் மூலமாக பல்லாயிரம் மக்கள் கேட்டு தன சுய மரியாதையைக் காப்பாற்றிக்கொண்டார்கள் தங்களது உரிமையைப் பெற்றுக்கொண்டார்கள். தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களும் பயன் பெற சுயமரியாதையுடன் தங்களது உரிமையைக் கேட்டுப் பெறவே இந்தியன் குரல் உதவுகின்றது. பத்திரிகை தொலைக் காட்சிகள் இந்தியன் குரல் பற்றிய செய்தி வெளியிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றார்கள. இந்தச் சட்டமும் இந்தியன் குரல் அமைப்பும் இல்லாமல் இருந்தால் ஆட்சியாளர்களுக்கு நல்லதுதானே