ஆதரவாளர்கள்

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

தமிழக அரசின் ப்ரீமேட்ரிக் கல்வி உதவித் தொகை:ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முற்றிலும் கல்விக் கட்டணம் இலவசம்.
அதேப்போல, ஆங்கில வழியில் கல்வி பயிலும் பிசி., எம்பிசி., டிஎன்சி மாணவர்களுக்கு  கல்விக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.
இதில் எம்பிசி, டிஎன்சி மாணவர்களுக்கு எந்த நிபந்தனையும் இன்றி கல்விக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.
பிசி மாணவர்கள், குடும்பத்தில் முதல் தலைமுறை மாணவராகவும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.50,000க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு ஆண்டில் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.20ம், 9 முதல் 10ம் வகுப்பு மாணவ, மாணவியதுக்கு 10 மாதங்களுக்கு மாதம் ரூ.25ம் வழங்கப்படும்.
--------------------------------------------------------------------------------------------

ஒரு நாள் அடையாள தர்ணா : திருப்பத்தூரில் 

பொது மக்களால் அளிக்கப்படுகின்ற பல்வேறு கோரிக்கை மனுக்கள் மற்றும் புகார்கள் உரிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை. பொது மக்கள் அலைக்கழிக்கப் படுகின்றனர். மனுதாரகளை மரியாதைக் குறைவாய் நடத்துவது உள்ளிட்ட அரசு அலுவலகத்தின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் தவறு செய்யும் அலுவலர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க  அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டியும் 29-04-13 அன்று காலை பத்து மணி முதல் திருப்பத்தூர் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஒரு நாள் தர்ணா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்களே தாங்களும் தங்களது நண்பர்களும்  தவறாது கலந்து கொள்ளக் கேட்டுக்கொள்கின்றோம். 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள மக்கள் உரிமையை மீட்டெடுக்க வாரீர் வாரீர் .

நிகழ்ச்சி ஏற்பாடு  
ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம் 
ஆலங்காயாம் ஒன்றியம் 
 தொடர்புக்கு 9789792251,

 நாள் 29-04-13

இடம் ;கோட்டாச்சியர் அலுவலகம் எதிரில் 
திருபத்தூர் 
வேலூர் மாவட்டம் 

நாள் 29-04-13 

கருத்துகள் இல்லை: