ஆதரவாளர்கள்

ஞாயிறு, 27 மே, 2012

கல்விக்கடன் மாணவர்களின் உரிமை

கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் 
நண்பர்களே, 
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மற்றும் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெற பெரிதும் உதவுவது கல்விக்கடன் தான். ஆனால் தற்பொழுது அனைவருக்கும்
திருவொற்றியூர் தெற்கு அரிமா சங்கம்
 நிறுவனத் தலைவர் பாலசுப்ரமணியம் அவர்கள்
 ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
  


கிடைப்பதில்லை. அதற்கு காரணம் நம் விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்திசெய்யாமல் கொடுப்பது, தேவையான இணைப்பு ஆவணங்கள் இல்லாமல் கொடுப்பது, விண்ணப்பத்தைக் கொடுத்து ஒப்புகை பெற தவறுதல் போன்ற காரணங்களால் வங்கிக்கடன் கிடைப்பதில்லை. ஒரு சில வங்கிகள் அனைத்து ஆவணங்கள் சரியாக இருந்தும் கடன் தர மறுப்பதும், விண்ணப்பங்கள் தர மறுப்பதும் தொடர்கின்றது. இந்தியன் குரல் அமைப்பு யாரிடமும் கெஞ்சிக்கொண்டிராமல் இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல் அலைந்து திரியாமல் லஞ்சம் கொடாமல் கல்விக்கடன், குடும்ப அட்டை, இருப்பிடம் உள்ளிட்ட அணைத்து சான்றுகள், அரசு மற்றும் தனியார் பணியாளர் பணிப்பயன், முதியோர் ஓய்வூதியம், அனைவருக்கும் மருத்துவம், சுகாதாரம், காப்பீடு, படித்த பெண்களுக்கு  திருமண உதவி  பட்டா பெயர் மாற்றம், மின் இணைப்பு உள்ளிட்ட நம் குடும்பத் தேவை நம் ஊரின் தேவைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 இன் மூலம் அரசின் அனைத்து நலன்களையும்  அறிந்து பெற்றுக்கொள்ள  கற்றுக் கொடுக்கின்றது.
தொடர்புக்கு; பிரதி மாதம்  திங்கள் கிழமை காலை 10 மணிமுதல் 11 மணி வரை  இந்தியன் குரல் உதவி மையம் எம் ஆர் எப் எம்ப்ளாயிஸ் யூனியன் பில்டிங்க்ஸ் திருவொற்றியூர் சென்னை 9444305581 , 9962676196 , 9941884295 , 
 பிரதி மாதம் ஞாயிட்றுக் கிழமை காலை 10 மணிமுதல் 11 மணி வரை எண் 267 திரு வி க குடியிருப்பு திரு வி க நகர் செம்பியம் பெரம்பூர் சென்னை 11 .9445115682
பிரதி மாதம் 1 மற்றும் 15 தேதிகளில் காலை 10 மணிமுதல் 11 மணி வரை கும்பத் காம்ப்ளக்ஸ் 29  ரத்தன் பஜார் சென்னை பூக்கடை காவல் நிலையம் எதிரில் 9940493159 
    மாநிலம் முழுவதும் இந்தியன் குரல் உதவி மையம் அறிய தொடர்புக்கு 94434 89976 ,9486172017 ,9444305581   
இந்தியன் குரல் அமைப்பு யாரிடமும் நன்கொடை பெறுவதில்லை நிவாகிகளின் சொந்த உழைப்பின் பணம் இந்த நோட்டீசை படித்து கீழே போடாமல் தேவையானவர்களுக்கு படித்து கொடுக்கக் கேட்டுக்கொள்கிறோம் 


கருத்துகள் இல்லை: