ஆதரவாளர்கள்

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

மின்சார கட்டணம் உயர்த்துவது குறித்து திருச்சியில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள்


திருச்சி: மின்சார கட்டணம் உயர்த்துவது குறித்து திருச்சியில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் எழுந்து நின்று திடீரென ஆர்ப்பாட்டமும், ஆணையத்திற்கு எதிராக கோஷமும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் இது எந்த அளவிற்கு உயர்த்தலாம் என்பது குறித்து மின் ஒழுங்குமுறை ஆணையம் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கருத்து கேட்டு வருகிறது.
திருச்சியில் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இன்று இந்த கூட்டம் நடந்தது. ஆணைய உறுப்பினர்கள் வேணுகோபாலன், நாகல் ராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் , விவசாயசங்க அமைப்பினர் எழுந்து நின்று கோஷங்கள் எழுப்பினர். இதில் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது, மின் கட்டணம் உயர்த்தக்கூடாது, என்றும் குரல் எழுப்பினர். மின்சாரம் முறையாக விநியோகம்
இல்லாமல் சிரமப்படுகிறோம் இந்நேரத்தில் கட்டணத்தை உயர்த்துவது நியாயமா என்றும், மேலும் இந்த கூட்டம் கருத்து கேட்பு கூட்டமாக நடக்கவில்லை என்றும் குறை கூறினர். தமிழ்நாடு விவசாய சங்கம், பாரதிகிஷன் சங்கத்தினர்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்த எதிர்ப்பை பதிவு செய்தனர். பின்னர் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனர். விவசாய அமைப்பினர் திடீரென எழுந்து கோஷம் போட்டதால் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.ரூ. 6 ஆயிரம் கோடி இழப்பீடா ? கூட்டத்தில் பேசிய மின்துறை நிதி செயலர் ராஜகோபால் பேசுகையி்ல் ; இலவச மின்சாரம் வழங்குவது தொடர்பாக அரசுக்கு 6 ஆயிரம் கோடி இழப்பீடு ஆகிறது என்றார். இதற்கு விவசாய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தவறான தகவல் என்றும் , கூறினர். இதனால் விவசாய அமைப்பினர் ஆவேசமுற்று கோஷம் போட துவங்கினர். 
விவசாய அமைப்பினர் கூறுவது என்ன ? :கூட்டத்தில் விவசாயிகள் தங்களின் கருத்துக்களை எடுத்துரைக்கையில்: மின் வாரியத்தில் உள்ள நிர்வாக சீர்கேடுகள் களைய வேண்டும். மின்வாரியத்திற்கு, தமிழக அரசு வழங்க வேண்டிய ரூ. 10 ஆயிரம் கோடியை விரைந்து வழங்க வேண்டும். மரணப்படுக்கையில் இருக்கும் மின்சாரம் என முதல்வரே ஒப்புக்கொண்டிருக்கும் போது மீட்சிக்கு முதல்வர் நிதி அளிக்க வேண்டியதுதானே ! இதனை விட்டு மக்கள் தலையில் ஏன் பாரத்தை சுமத்த வேண்டும்? இலவச மிக்ஸி, இலவச கிரைண்டர், வழங்கும் பொருட்களுக்கு மின்சாரம் இன்னும் அதிகம் தேவைப்படும். மாற்று எரிசக்தி மூலம் மின்சாரம் உருவாக்க வேண்டும். விவசாயம் செய்ய முடியாமல் தோட்டக்கலை, கோழி வளர்ப்பு, மீன்வளர்ப்பு தொழிலில் ஈடுபடுவோருக்கு கமர்சியல் கட்டணம் வசூலிக்க கூடாது என வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை: