ஆதரவாளர்கள்

சனி, 7 ஜனவரி, 2012

ரேஷன் கார்டு புதுப்பிப்பதில் சிரமம் இருக்கிறதா?


ரேஷன் கார்டு புதுப்பிப்பதில் சிரமம் இருக்கிறதா?
ரேஷன் கார்டு புதுப்பிப்பதில் ஏதேனும் சிரமம் இருந்தால் பொதுமக்கள் அதுகுறித்து தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை ஆணையாளர் பி.எம்.பசீர் அகமது நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
’’தற்பொழுது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளின் (ரேஷன் கார்டு) காலத்தை 1.1.2012 முதல் 31.12.2012 வரை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டது. அதன்படி 1.1.2012 முதல் குடும்ப அட்டைகள் புதுப்பிக்கும் பணி சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது.

புதுப்பிக்கும் பணிக்கான செயல்திட்டம் மற்றும் களப்பணியாளர்கள் இப்பணியை செயல்படுத்தும் விதம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


குடும்பத் தலைவர்கள், உறுப்பினர்கள் தாங்களே முன் வந்து வாய்மொழியாக தேவையான விவரங்களை தெரிவித்து குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்வதுடன், தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களையும் வாங்கிச் செல்கின்றனர்.

5.1.2012 வரை 61/2 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை புதுப்பித்துள்ளனர்.

28.2.2012 முடிய வரிசைக் கிரம பட்டியலின்படி உரிய நாட்களில் புதுப்பித்துக் கொள்ள கால அவகாசம் உள்ளது. இந்த குடும்ப அட்டைகள் புதுப்பிக்கும் பணியிலோ, அல்லது அத்தியாவசிய உணவு பொருள்கள் பெறுவதிலோ ஏதேனும் சிரமங்கள் இருப்பின், குடும்ப அட்டைதாரர்கள் 7299998002, 8680018002, 7200018001 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிவிக்கலாம்’’ என்று உள்ளது.


கருத்துகள் இல்லை: